தூத்துக்குடி மாநகர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் 41 புதிய திட்டங்களை மேயர் அறிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 2025- 26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டார். அதன்படி 171 கோடியே 26 லட்சம் ரூபாய் வருமானம் வருவதுடன், பல்வேறு பணிகளுக்காக 168 கோடி 31 லட்சம் ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சுமார் 7 கோடி ரூபாய் உபரி வருமானம் வரும் என்பதால், தூத்துக்குடி மாநகர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மைய நூலகம், மகளிர் பூங்கா, நீச்சல் குளம் உள்ளிட்ட 41 புதிய திட்டங்களை மேயர் அறிவித்தார்.
இதேபோன்று பல்வேறு திட்ட பணிகள் தூத்துக்குடி மக்களுக்காக செயல்படுத்த உள்ளதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.