இந்தியாவின் கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக டி.ஆர்.டி.ஓ தெரிவித்துள்ளது.
அதன்படி சந்திபூரில் நடைபெற்ற சோதனையில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை குறுகிய தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த ஏவுகணையில், ஏவிய பிறகும் இலக்கை மாற்றும் வசதி கொண்ட இருவழி டேட்டா லின்க் சிஸ்டம் உள்ளது.
இந்நிலையில் சோதனை நடத்தப்பட்டது தொடர்பான வீடியோவை டிஆர்டிஓ வெளியிட்டுள்ளது.