காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் நான்கு இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கடைசி பரிமாற்றம் இதுவாகும். போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில், மொத்தம் இஸ்ரேல் பிணைக் கைதிகள் 33 பேரும், பாலஸ்தீனர்கள் 2 ஆயிரம் பேரும் பரிமாறி கொள்ளப்பட்டனர்.
2ம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கப்படுமா என்று எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.