சீமான் வீட்டு கதவில் போலீசார் சம்மனை ஒட்டிச்சென்றது ஏன் என, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீமானின் வீட்டில் உள்ளவர்களிடம் சம்மனை வழங்காதது ஏன்? என வினவியுள்ளார். சம்மனை வாங்க மறுத்தால் மட்டுமே அதனை கதவில் ஒட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிக்கு எதிராக புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் தங்கள் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்