சேலத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற மயான கொள்ளையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மயான கொள்ளை மாசி அமாவாசைக்கு மறுநாள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, செவ்வாய்பேட்டை அங்காளம்மன், பள்ளப்பட்டி பெரியாண்டிச்சி அம்மன், காளியம்மன் உள்ளிட்ட 86 கோயில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன்கள் சுடுகாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
பக்தர்கள் தங்கள் கழுத்தில் ஆடு மற்றும் மாட்டின் குடல்களை மாலையாக அணிவித்தும், எலும்புக்கூடுகளை கையில் ஏந்தியும் ஆக்ரோஷமாக ஆடி வந்தனர். மேலும், ஆடு, கோழிகளை கடித்து சாமியாடினர்.