பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் – அரியலூர் ரயில் பாதை திட்டத்துக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால் திட்டம் நிறைவேற்றித் தரப்படும் என, ரயில்வே துறை இணை அமைச்சர் வி.சோமண்ணா தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அம்ரூத் பாரத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்காக நடப்பாண்டில் 6 ஆயிரத்து 626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 300 கோடி ரூபாய் அதிகம் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்து 303 கிலோமீட்டர் தொலைவுக்கு இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், 687 ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தமிழ்நாடு, கர்நாடகம், கேரள ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மத்திய அரசு அரசியல் செய்யாமல் அதிக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி
வருவதாக அமைச்சர் வி.சோமண்ணா தெரிவித்தார்.