ஈரோடு மாவட்டம் பவானி அருகே அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆனந்தம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயிலில் மாசி தேர் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அம்மனுக்கு காலை, மாலை என இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில் பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல குதிரைகள் மேடு பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் இருந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு ஓம் சக்தி , பராசக்தி கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து ஸ்ரீ சக்தி மாரியம்மனை தரிசனம் செய்தனர்.