தஞ்சை பெரியகோயிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில், பரத கலைஞர்கள் நடனமாடி இறைவனை வழிபட்டனர்.
சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரியகோயில் வளாகம் பின்புறம் அமைந்துள்ள பெத்தன்னன் கலையரங்கத்தில் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.
பெங்களுர் ஃபைன் ஆர்ட்ஸ் நாட்டிய குழுவினர் மற்றும் திருச்சி நாட்டியாலயா நடன குழுவினரின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பரத கலைஞர்கள் நடனம் ஆடி சிவபெருமானை வழிபட்டனர்.
இந்த நிகழ்வை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர்.