ஆரோவில் உதய தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாட்டினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோ பகுதியில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை உருவாக்க அன்னை மிரா அல்பாசா தலைமையில் 1968ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதன் நினைவாக ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், 57ஆம் ஆண்டு உதய நாளையொட்டி, அதிகாலை ஆரோவில் ஆம்பி தியேட்டரில் கூட்டு தியானம் நடைபெற்றது. இதில் ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டு உலக அமைதி வேண்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.