கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கார்கள் நிற்க வைக்கும் யார்டில் தீ விபத்து ஏற்பட்டு 2 கார்கள் சேதமடைந்தன.
மோரணப்பள்ளி அடுத்த இரண்டாவது சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான புதிய கார்கள் நிறுத்தும் யார்ட் உள்ளது. இந்நிலையில், யார்டில் தீ விபத்து ஏற்பட்டு, அருகில் கிடந்த குப்பைகளில் பரவியது.
இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களும் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.