திண்டுக்கல்லில் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த மாதர் சங்க நிர்வாகியை மீட்க சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சச்சிதானந்திற்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை கண்டித்து மாதர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாதர் சங்க மாவட்ட செயலாளர் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். இதனை அறிந்த இந்திய கம்யூனிட் கட்சி எம்.பி. சச்சிதானம், நேரில் சென்று போலீசாரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அராஜகமான முறையில் நடந்துகொள்ளும் காவல்துறையினரை கண்டிப்பதாகவும்,
ஜனநாயக ரீதியில் போராடுபவர்களை ஒடுக்க நினைப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் எனவும் அவர் கூறினார். பின்னர், வீட்டு காவலில் வைக்கப்பட்ட மாதர் சங்க நிர்வாகியை அழைத்து செல்ல முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.