திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சொத்து பிரச்சனையில் ஊராட்சி மன்ற தலைவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர் அடுத்த பெரியகொம்மேஸ்வரம் பகுதி ஊராட்சி மன்ற தலைவராக சோபனா கோவிந்தராஜ் உள்ளார்.இவரது கணவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட நிலையில், கணவரின் சகோதரர் பாண்டியன் என்பவருக்கு இடையே சொத்து பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், பாண்டியனின் மகன் 17 வயது சிறுவன், வீட்டில் இருந்த தனது சித்தியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதையடுத்து, நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் தப்பியோடிய சிறுவனை கைது செய்தனர்.