காஞ்சிபுரம் அடுத்த ஏகனாம்பேட்டையில், சாலையில் நடந்து சென்ற பெண்ணை கிண்டல் செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்த 23 வயது பெண், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மாலை சுமார் 7 மணியளவில் கருக்குப்பேட்டையில் உள்ள கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு ஏகனாம்பேட்டைக்கு அந்தப் பெண் நடந்து சென்றுள்ளார்.
அப்போது கோனேரிகுப்பம் பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் அந்தப் பெண்ணை கிண்டல் செய்ததுடன், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், சதீஷ்குமார், சந்திரசேகர், ரங்கா ஆகிய 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய வெங்கட் என்ற இளைஞரை தேடி வருகின்றனர்.