நடிகை ராய் லட்சுமி மகா கும்பமேளாவில் புனித நீராடிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராய் லட்சுமி. இவர் தமிழில் நான் அவன் இல்லை, காஞ்சனா, மங்காத்தா போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது. இந்நிலையில், மகா கும்பமேளாவில் புனித நீராடிய புகைப்படங்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ராய் லட்சுமி பகிர்ந்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.