விவாகரத்து வதந்திகளால் மிகவும் வேதனையடைந்தேன் என நடிகர் ஆதி தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் கடந்த 2022-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் இருவரும் பிரிய இருப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவின.
இது தொடர்பாக பேசியுள்ள நடிகர் ஆதி, நாங்கள் காதலர்களாக மாறுவதற்கு முன்பும், தற்போது கணவன் – மனைவியான பிறகும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என தெரிவித்தார்.
இதுபோன்ற வதந்திகள் பரவியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது என தெரிவித்த ஆதி, சில யூடியூப் சேனல்கள் ஆதாயத்திற்காக தவறான செய்திகளை பரப்புகின்றன எனவும் குற்றம் சாட்டினார்.