கரூர் மாவட்டம் குளித்தலை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உயர் ரக மதுபானங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேல தாளியாம்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பணியாளர்கள் வழக்கம்போல் பணத்தினை லாக்கரில் வைத்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், டாஸ்மாக் கடையின் பின்புற சுவற்றில் துளையிட்ட மர்ம நபர்கள், பின்னர் பூட்டை உடைத்து உயர் ரக மதுபானங்களை திருடி சென்றுள்ளனர்.
கடையில் 2 லட்சம் ரூபாய் பணம் லாக்கரில் இருந்ததால் தப்பித்தது. லாக்கரின் அருகே பட்டாகத்தி கிடைத்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் .