கர்நாடகாவில் உள்ள ஹோட்டல்களில் இட்லி தயாரிக்க பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் முழுவதும் 251 இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான ஓட்டல்களில் இட்லியை வேக வைப்பதற்கு துணிகளுக்கு பதில், பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், இட்லிகளை வேகவைக்க பிளாஸ்டிக் தாள்களைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உத்தரவிட்டுள்ளார்.