டெல்லியில் உள்ள 14 மருத்துவமனைகளில் ஐ.சி.யூ, கழிப்பறைகள், பிணவறை வசதி இல்லை என்பது சுகாதார உள்கட்டமைப்பு குறித்து சி.ஏ.ஜி., அறிக்கையில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க ஆட்சி அமைந்துள்ளது. டெல்லி சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. சட்டசபையில் தாக்கல் செய்ய சுகாதார உள்கட்டமைப்பு குறித்து சி.ஏ.ஜி., அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
அதில், டெல்லியில் 21 சதவீத செவிலியர்கள் மற்றும் 38 சதவீத துணை மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 மீட்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 787.91 கோடியில் 582.84 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது