பாலியல் வன்முறை சம்பவத்தில் சிறுமி மீதே தவறு என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சீர்காழியில் மூன்றரை வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் அந்த குழந்தையின் மீதே தவறு என ஆட்சியர் மகாபாரதி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அரசு விழாவில் மாவட்ட ஆட்சியர் இவ்வாறு பேசியது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு எதிராக பேசிய மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவருக்கு பதிலாக மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஹெச்.ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.