மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் திருக்களாச்சேரி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மயிலாடுதுறையில் பெய்த கனமழையால், திருக்களாச்சேரி கிராமத்தில் உள்ள திறந்தவெளி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
இதனால் விவசாயிகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு தண்ணீரை வடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகள் ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல், நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.