கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள அரங்கநாதர் கோயில் செயல் அலுவலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
காரமடை பகுதியில் உள்ள அரங்கநாதர் கோயிலில் உள்ள பழமை வாய்ந்த கிணற்றில் ரூபாய், தங்கம், வெள்ளி காசுகள் போன்றவற்றை காணிக்கையாக பக்தர்கள் வீசி செல்வது வழக்கம்.
இந்த நிலையில், உயர் அதிகாரிகளின் அனுமதி இன்றி கிணற்றை தூர்வாரிய கோயில் செயல் அலுவலர் சந்திரமதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைதொடர்ந்து செயல் அலுவலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.