கரூர் அருகே அரசு பேருந்தில் கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .
சேலத்தில் இருந்து கரூர் வழியாக மதுரைக்கு அரசு பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் பயணம் செய்த நாகேந்திரன், ராம்குமார், செந்தில்குமார், யோகேஸ்வரன், நவீன்ராஜ் ஆகிய 5 பேரிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திரவில் இருந்து கஞ்சாவை வாங்கி விற்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.