இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதலவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில். தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விடுத்துள்ள பதிவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்து செய்தியில், முதல்வர் தமது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
தங்களுடைய தலைமையினரிழ தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாகவும், எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடம் தமிழ் நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் வாழ்த்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்தியில். தமிழக முதலமைச்சர் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.