கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டையில் பிரதமர் உருவபொம்மையை எரித்த மனிதநேய மக்கள் கட்சியினரை கண்டித்து பாரதிய ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக மாவட்ட தலைவர் தமிழ் அழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்பட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு, உருவபொம்மையை எரித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து பேரணியாக சென்று காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றனர்.
ஆனால், அதற்கு அனுமதி அளிக்காத காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர், பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர். வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமரின் உருவபொம்மையை அக்கட்சியினர் எரித்தனர்.