இந்தியை யாரும் திணிக்கவில்லை என்றும், தாரைப் பூசி அழிப்பதால் இந்தி அழியப் போவதுமில்லை எனவும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியம், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் பங்கேற்ற சரத்குமார், சமத்துவ விருந்தினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பினனர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி மறுசீரமைப்பு இன்னும் வரையறுக்கப்படவில்ல என தெரிவித்தார். ,தொகுதி குறைக்கப்படுகிறது என தெரிந்தால் அனைவரும் சேர்ந்து போராடலாம் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளை, போதை, வேங்கை வயல் பிரச்சனை ஆகியவற்றில் மும்மரம் காட்டாத அரசு தமிழ் வளர்க்கிறேன் என கூறுவதாகவும், தமிழ் மொழியை எங்கே வளர்க்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
ஹிந்தியை யாரும் திணிக்கவில்லை என்றும், தாரை பூசி அழிப்பதால் ஹிந்தி அழிய போவதுமில்லை என்றும் அவர் கூறினார். 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான தமிழ் எப்படி அழியும் என கேள்வி எழுப்பிய சரத்குமார், 200 ஆண்டுகள் அடிமையாக இருந்த ஆங்கிலே மொழியை கற்றுக் கொள்கின்றோம் ஆனால் 70 கோடி மக்கள் பேசும் ஹிந்தி மொழியை கற்றுக் கொள்வதற்கு ஹிந்தி திணிப்பு என கூறுவதாகவும் தெரிவித்தார். மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் திமுக எதிர்ப்பதாகவும் சரத்குமார் கூறினார்.