சென்னை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் இருந்த புற்கள் தீப்பிடித்து எரிந்தன.
பூந்தமல்லி அடுத்த சென்னீர் குப்பம் பகுதியில் பூந்தமல்லி – பெங்களூரை இணைக்கும் முக்கிய சாலை அமைந்துள்ளது. இங்கு சாலையின் நடுவே தடுப்புகள் உள்ள நிலையில் அந்த தடுப்புகளில் வைக்கப்பட்டிருந்த செடிகள் மற்றும் புற்கள் வெயிலின் தாக்கத்தால் அதிக அளவில் காய்ந்து போய் இருந்தது.
இந்த நிலையில், தீப்பிடித்து சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையின் நடுவே இருக்கும் புற்களை பராமரிக்க வேண்டுமெனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.