மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாகவும், ‘சம கல்வி எங்கள் உரிமை’ என்ற பெயரில் தமிழக பாஜக சார்பில் வரும் 5-ம் தேதி இணையதளம் துவங்கப்பட இருப்பதாகவும் கட்சியின் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசின் ஒருதலைபட்சமான செயல்பாட்டால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி பயிலும் உரிமை பறிக்கப்படுவதாக தெரிவித்தார்.
தமிழக பாஜக சார்பில் ‘சமகல்வி எங்கள் உரிமை’ என்ற இணையதளம் தொடங்கப்பட உள்ளதாகவும், இந்த இணையதளம் அரசு பள்ளி மாணவர்களின் குரலாக எதிரொலிக்கும் என்றும் அவர் கூறினார்.
இணையதளம் துவங்கப்பட்ட பின் டிஜிட்டல் முறையில் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்றும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் நேரடியாக சென்றும் கையெழுத்து பெறவுள்ளதாகவும் கரு.நாகராஜன் தெரிவித்தார்.