சிவகங்கையில் பன்றிகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட தாமதமாவதால் விவசாயிகள் ஆட்சியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது பன்றிகளால் பயிர்கள் கடுமையாக சேதமடைவதாக விவசாயிகள் கூறினர்.
மேலும், பன்றிகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட காலதாமதம் ஆக்குவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைதொடர்ந்து ஒரு வார காலத்திற்குள் கண்டிப்பாக ஆய்வறிக்கை வெளியிடப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.