ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மாணவர்களுக்கு சொந்த செலவில் கழிப்பறை கட்டிக் கொடுத்த தலைமை ஆசிரியருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 60 மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
அங்கு புதிய கழிப்பறை கட்டி தருமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்த போதும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென தெரிகிறது.
இதனால் மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கழிப்பறை கட்டி கொடுத்த நிலையில், அதனை மாணவர்களை வைத்தே திறந்து வைத்தார்.