கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாணவரை தாக்கிய பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
திம்மம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக சரவணன் பணியாற்றி வந்தார். அவர் அப்பள்ளியில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவரை அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் பலத்த காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆசிரியரை பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.