டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் மூலம் டெல்லி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் அங்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார், தமிழ்நாடு இல்லத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தவர்களை உடனடியாக வெளியேற்றி மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் ஒருமணி நேரம் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தீவிர சோதனைக்கு பின் தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒவ்வொருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாடு இல்லத்தில்தான் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.