பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 47 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசம் நிறைவு பெற்ற நிலையிலும், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் 11 நாட்களில் கோயில் உண்டியல்கள் நிறைந்ததைத் தொடர்ந்து உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் கோயில் ஊழியர்கள், பழனியாண்டவர் கல்லூரி மாணவர்கள், வங்கி பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 47 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஆயிரத்து 632 வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவை கிடைக்கப் பெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.