இந்தியா உலகிற்கு புதிய பொருளாதார பாதையை வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற NXT மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, பல உலகளாவிய உச்சி மாநாட்டில் இந்தியா முன்னிலை வகிப்பதாகக் கூறினார்.
பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் இந்தியாவிற்கு வருகை தர விரும்புவதாக கூறிய பிரதமர் மோடி, மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கானோர் கலந்து கொண்டதை உலகம் வியப்புடன் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.