சென்னை பல்லாவரம் அருகே நடைபெற்ற முதலமைச்சர் பிறந்த நாள் விழாவில் திமுகவின் கட்சி கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், பல்லாவரத்தில் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்து கொண்டு திமுகவின் கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது திமுக கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் தொண்டர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக சுதாரித்து கொண்டு கட்சி கொடியை முறையாக அவர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து, திமுகவினரால் வழங்கப்பட்ட உணவினை வாங்க பொதுமக்கள் முண்டியடித்துச் சென்றதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.