திருச்சி மாநகரில் தேங்கிய 20 டன் பிளாஸ்டி கழிவுகளை தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
திருச்சி மாநகரில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், அரியலூரில் உள்ள சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன. வாரத்திற்க்கு 5 லாரிகளில் கழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுவந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக முறையாக கழிவுகள் கொண்டு செல்லப்படுவதில்லை என கூறப்படுகிறது.
இதனால் திருச்சி மாநகராட்சியில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் தேங்கி துர்நாற்றம் வீசி வந்தது. மேலும், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், சுமார் 20 டன் பிளாஸ்டி கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.