கோவை கோபிசெட்டிப்பாளையம் அடுத்த மலை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் முதன்முறையாக விமான பயணம் மேற்கொண்டனர்.
தொட்டகோம்பை, கரும்பாறை உள்ளிட்ட மலைகிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களது குழந்தைகள் 34 பேர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்றுவரும் நிலையில், நகர பகுதிகளுக்கு செல்ல முறையான பேருந்து வசதி இல்லாததால், பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களை விமான மூலம் சென்னை அழைத்துவர திமுக நிர்வாகி சிவபாலன் நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து விமான மூலம் சென்னை அழைத்து வரப்பட்டுள்ள மாணவ – மாணவிகள், முதலமைச்சரை சந்தித்து பேருந்து வசதி செய்து தர கோரிக்கை விடுக்கவுள்ளனர்.