ரமலான் நோன்பை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும். இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
இதனையொட்டி இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட ரம்ஜான் வாழ்த்துக்கள் எனறும், இந்த புனித மாதம் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும் என தெரிவித்துள்ளார்.
இதேபால் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்தியில், இன்று முதல் புனித ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்கும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு, தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
சுய கட்டுப்பாட்டுடன், உடலை வருத்தி, மனரீதியாக இறைவனுடன் நெருக்கமாக உணர உதவும் ரம்ஜான் நோன்புக் காலம், அனைவருக்கும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அளிப்பதாக அமைய வேண்டிக் கொள்கிறேன் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
.