சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர பகுதிகளுக்கு பேருந்து சேவையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியது.
சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை மாநில அரசு அடக்கியது. இதுதவிர தாமாக முன்வந்து சரணடையும் நக்சலைட்டுகளுக்கு அரசு சன்மானம் அறிவித்ததால், ஏராளமானோர் ஆயுதங்களைக் கைவிட்டு நிராயுதபாணியாக சரணடைந்து மறுவாழ்வு பெற்றனர்.
அந்த வகையில், நக்சலைட்டுகளின் பிடியிலிருந்து விடுபட்ட மாநிலத்தின் கடைகோடி கிராமமான பாமேட் உள்ளிட்ட கிராமங்களுக்கு பேருந்து சேவையை சத்தீஸ்கர் அரசு அறிமுகப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பயனடைந்துள்ளனர்.