“செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு” என்ற பதாகைய திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன் ஏன் வைக்கக்கூடாது? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
“செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு” என சென்னையில் வைக்கப்பட்டுள்ள பதாகையை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவிட்டுள்ளதை அண்ணாமலை சுட்டிகாட்டியுள்ளார்.
மேலும் நீங்கள் ஏன் இந்த பதாகையை திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன் வைக்கக்கூடாது? என்றும், அவர்கள் நடத்தும் பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்துவிடும் என்ற அச்சமா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
செம்மொழி இருக்க பிரெஞ்சு மொழி எதற்கு? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.