திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே புல்லட் மீது அரசு பேருந்து மோதியதில் 25 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து ஆயுதப்படை காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாத்தலை அருகே செங்குடி பகுதியை சேர்ந்த விவேக், திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவர் பணி முடிந்து தனது புல்லட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, உத்தமர்கோவில் ரயில்வே மேம்பாலத்தில், புல்லட் மீது எதிரே வந்த அரசு விரைவு பேருந்து மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விவேக் 25 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.