தமிழகத்தின் இயற்கை வளம் அண்டை மாநிலத்தால் சுரண்டப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டி உள்ளார்.
தென்காசியில் நடைபெற்ற மலையைக் காப்போம் மண்ணை மீட்போம் ஆர்ப்பாட்டத்தில் அவர்,”தமிழ்நாட்டின் மலை வளத்தை கேரளா கொள்ளையடிப்பதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மலையை வெட்டும் கேரளா, குப்பையை கொண்டு வந்து கொட்டுவதாகவும் சாடினார்.
கேரளாவிலிருந்து குப்பைகள் கொட்டப்படுவது முதல்வருக்கு உள்ளிட்ட அரசு நிரவாகத்திற்கு தெரியாதா? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். தெரியாது என்றால் அதிகாரத்தில் ஏன் இருக்கிறார்கள் என்றும் அவர் வினவினார்.