திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு பேருந்து ஆம்னி வேன் மீது மோதியதில் அதில் பயணித்த 5 பேர் படுகாயமடைந்தனர்.
கரூர் மாவட்டம் பரமத்தி பொன்மலர் பாளையத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் தனது குடும்பத்தினருடன் பழனியில் சாமி தரிசனம் செய்து விட்டு ஆம்னி வேனில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
பேருந்து நிலையம் அருகே சென்றபோது அவ்வழியே வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி வேனில் பயணித்த 5 பேரும் படுகாயமடைந்தனர். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.