அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்குமென அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், அமெரிக்க குடியரசு நிறுவப்பட்டது முதலே, ஆங்கிலம் தேசிய மொழியாக பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தேசத்தில் சுதந்திர பிரகடனம், அரசியலமைப்பு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் ஆங்கில மொழியில் எழுதப்பட்டவை என குறிப்பிட்டுள்ள அவர், ஆங்கிலம் பேசுவது பொருளாதார வளர்ச்சிக்கான கதவுகளை திறப்பதாக கூறியுள்ளார்.