ரோட்டரி இண்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் சென்னையில் இருந்து நேபாளம் வரையிலான பசுமை விழிப்புணர்வு பயணம் முடிந்து சென்னை திரும்பிய பெண்கள் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரோட்டரி இண்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் பசுமை விழிப்புணர்வை மையமாகக் கொண்டு, சென்னையில் இருந்து நேபால் வரை காரில் சென்ற 3 பெண்கள், ஆறாயிரத்து 360 கிலோமீட்டர் தூரம் வெற்றிகரமாக பயணித்து, சென்னை திரும்பினர்.
அவர்களுக்கு சென்னை தியாகராய நகரில் ரோட்டரி இண்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.
சென்னை திரும்பிய 3 மங்கையர்களையும் ரோட்டரி இண்டர்நேஷனல் அமைப்பினர் பூங்கொத்து கொடுத்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.பின்னர் நடைபெற்ற பாராட்டு விழாவில்
17 நாள் பசுமை பயணம் தொடர்பான காணொலி ஒளிபரப்பப்பட்டது.