மதுரையில் 17 வயது சிறுவன் ஜேசிபி வாகனத்தை இயக்கி சாலையோரம் நின்றுகொண்டிருந்த வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
செல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் நள்ளிரவில் ஜேசிபி வாகனத்தை இயக்கியுள்ளான். அப்போது கண்மாய் கரை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் ஜேசிபி வாகனம் மோதியுள்ளது.
இதில் அங்கிருந்த ஆட்டோ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்த நிலையில், பொதுமக்கள் சிறுவனை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.