சேவாபாரதி தென் தமிழ்நாடு சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்ற கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவிலில் உள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் கர்மயொகினி சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட வீரமங்கை சாத்வி ராணி, அஹில்யா பாய் ஹோல்கர ஆகியோரின் 300வது ஆண்டு பிறந்த நாள் விழா, சேவா பாரதி வைபவ ஸ்ரீ மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தின் 25வது ஆண்டு விழா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மகளிர் சமுதாய மேம்பாட்டிற்கான திட்டங்களின் தொடக்க விழா ஆகிய நிகழ்வுகளை உள்ளடக்கிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
நாகர்கோவிலில் நடைபெற்ற கர்மயொகினி சங்கமம் நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயி, ஆர்எஸ்எஸ் அகில இந்திய பொது செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் வெட்டம்மாள், குணவதி, ராணி கமலவதி போன்ற அறியப்படாத சாதனை பெண்களுக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் பரத நாட்டியம் உட்பட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், விட்டு விட்டு பெய்த மழையிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.