அமெரிக்க தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிரங்கியது.
டெக்சஸ்சை சேர்ந்த “பயர்பிளை ஏரோ ஸ்பேஸ்” என்ற தனியார் நிறுவனம் ப்ளூ கோல்ட் மிஷன்-1 என்ற பெயரில் நிலவை ஆய்வு செய்யும் திட்டத்தை மேற்கொண்டது.
இதற்கான விண்கலத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் உதவியுடன் இந்நிறுவனம் விண்ணில் ஏவியது. அமெரிக்க நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு நிலவில் தரையிறங்கிய விண்கலம், மண்ணை பரிசோதிக்கும் கருவி, கதிர்வீச்சை தாங்கும் கருவி உள்ளிட்ட 10 உபகரணங்களை ஏந்திச் சென்றது.
மேலும் வரும் 14ம் தேதி நிகழவுள்ள சந்திர கிரகணத்தை இந்த விண்கலம் படம் பிடிக்க உள்ளது.