மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இயல்பை விட அதிக அளவில் நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
ஏற்கனவே, புலிகள் கணக்கெடுப்பு காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.