அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நிதி நிறுவன ஊழியர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் மேல வீதியை சேர்ந்த சிவா என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் பணிக்கு சென்ற சிவா வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், செங்கால் ஓடை அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, அது சிவாவின் உடல் என்பது தெரியவந்தது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.