ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பாரதத்தை காக்க வந்த தன்னார்வலர்கள் என பாஜக நிர்வாகி ஸ்ரீமதி கோம்பெல்லா மாதவி லதா தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் விஜில் அமைப்பின் சார்பில் பெண்களும், நாகரிகமும் என்ற தலைப்பில் பொதுவுடமை கருத்துப் பகிர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பெண்களின் சமூக, கலாச்சார வளர்ச்சி குறித்த விவாதிக்கப்பட்டது.
இதில் பாஜக நிர்வாகியும், பெண்கள் உரிமை பாதுகாப்பாளருமான ஸ்ரீமதி கோம்பெல்லா மாதவி லதா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், RSS அமைப்பினர்தான் இந்த பாரதத்தை காக்க வந்த தன்னார்வலர்கள் என்றும், அவர்கள் பாரதத்தின் சனாதன தர்மம் மற்றும் புனிதத்தை காக்க பாடுபடுவர்கள் என்றும் புகழாரம் சூட்டினார்.